Thursday, 6 August 2015

கொங்க நாவிதன் வரலாறு


மங்கலன்

வெள்ளாள வம்சத்தவர்களுக்கு சகல நிகழ்ச்சிகளிலும்,முன்னின்று கூறுவதும்,சவரத்தொழில் புரிபவனுமான இக்குடிமகனின் ஆதிவம்சம்
நம் வேளாள மரபே.

வெள்ளாளன்+செட்டி=வெள்ளாஞ்செட்டியில் இருந்து உருவானதே.
பெருங்குடி கூட்டத்தில் பிறந்த வாழிபுல்லாக்கவுண்டருக்கு நான்கு ஆண்மக்கள் இருந்தனர்,

ஒருநாள் வாழிபுல்லாக்கவுண்டருக்கு,வேட்டுவநாவிதன் ஒருவன்
முகச்சவரம் செய்துகொண்டிருக்கும் போது,அவ்வூர்த் தலைவனான வேட்டுவக்கவுண்டன் குதிரை ஏறித் தன் தோட்டத்திற்கு வாழிபுல்லாக்கவுண்டர் வீட்டுவழியாகச் சென்றார்.
அவரைக்கண்ட நாவிதன்  எழுந்து வணங்க அவர் வாப்பா என்று கூறிவிட்டுத் தன் தோட்டத்திற்குப் போய்விட்டார்.
நாவிதன் தன்னை வேட்டுவக்கவுண்டர் ஏதோ வேலையாக கூப்பிடுகிறாறென்று நினைத்துப் பாதிசவரத்துடன் அவரை அப்படியே விட்டுவிட்டுத் தலைவனைப் பின்தொடர்ந்து தோட்டத்திற்குச் சென்றான். வாழிபுல்லாக்கவுண்டன் வெகுநேரம் வரை நாவிதனைப் பார்த்தும்,அவன் வராமையால் அதிகவிசனமுற்றுத் தன்மூத்தமகனாகிய நல்லதம்பிக்கவுண்டனை அழைத்து நடந்தைக்கூற அவன் தந்தையைப் பார்த்து அண்ணா பயப்படாதீர்கள் அவன் வைத்துவிட்டுப்போன சவரக்கத்தியை எடுத்து சவரத்தை முடிக்கிறேன். 
என்றுகூறி அக்கத்தியை எடுத்துப்பாக்கிச் சவரத்தைப் பூர்த்தி செய்தான். ஊர்த்தலைவனை நாவிதன் தோட்டத்தில் வந்து வணங்க ஏண்டா நான் வரும்பொழுது வாழிபுல்லாக்கவுண்டருக்குச் சவரம் செய்துகொண்டிருந்தாயே அதற்குள் எப்படி முடித்து வந்தாயென்று கேட்க சாமி நான் கும்பிட்டதற்கு நீங்கள் வாப்பா என்றீர்கள். என்னைத்தான் நீங்கள் கூப்பிட்டீர்கள் என்று நினைத்துவந்தேன். என்றான். 
ஏண்டா மடையா,பாதிசவரத்தில் விட்டுவரச்சொல்லி எவனாவது கூப்பிடுவானா கூப்பிட்டால் நீதான் வரலாமா சீக்கிரம் ஓடிச்சவரத்தை முடி என்றுரைத்தார்.
நாவிதன் நாம் இங்குவந்து வெகு நேரமாகிவிட்டது இனிமேல் அங்கு போனால் அடிவிழும் என்று பயந்து வாழிபுல்லாக்கவுண்டரிடம் போகாமல் தன் வீட்டிற்குப் போய்விட்டான். 
மறுநாள் தலைவன் நாவிதனைக்கூப்பிட்டு வாழிபுல்லாக்கவுண்டருக்குச் சவரம் நேற்றுச்செய்தாயா என்றுகேட்க அவன் இல்லிங்க சாமி என்றான். பின்யார் பாக்கிச்சவரம் செய்துஇருப்பார்கள் இதை அறிந்துவருவோமென்று தானே வாழிபுல்லாக்கவுண்டன் வீட்டிற்கு வந்தார். ஊர்த்தலைவனான வேட்டுவக்கவுண்டனை உபசரித்தார். ஏன் கவுண்டரே நேற்று நாவிதன் பாதி சவரத்தில் உங்களை விட்டுட்டு என் தோட்டத்திற்கு வந்துவிட்டானே. மீதிச்சவரத்தை செய்தது யார் என்று கேட்க என் மூத்தமகன் நல்லதம்பிக்கவுண்டன் தான் செய்தான். 
நீ ஊர்த்தலைவன் என்ற கர்வத்தினால்தானே நாவிதனைப் பாதிசவரத்தில் விட்டு வரும்படி சொன்னாய் இனிமேல் இந்த நாவிதன் எங்கள் வேளாளவமிசத்திற்கே வேண்டாமென்று கோபமாய்க் கூறினார். அப்படியானல் எங்கள் வேட்டுவவமிசத்திற்கும் வேண்டாம்
உங்கள் மகனே சவரத்தொழில் செய்யட்டும் என்றார். 
இச்சொல்லைக் கேட்ட வாழிபுல்லாக்கவுண்டன் ஆத்திரமும் கோபமும்கொண்டு என்னசொன்னாய் ஊர்த்தலைவனே என் மகனா! உன்வம்சத்தவர்களுக்குச் சவரம்செய்வது, என்வீட்டுநாய்கூட உன்வீட்டு நீரைக்குடிக்காது தெரியுமா என்றுரைத்தார். 
உங்கள் வீட்டுநாய் என்வீட்டில் அன்னம்புசித்தால் உங்கள் மகன் எங்கள் வம்சத்தவர்களுக்கும் சவரத்தொழில் செய்யயட்டும்.
அன்னம்புசியாவிட்டால் வேண்டாமென்றான் தலைவன், வாழிபுல்லாக்கவுண்டரும். சரி என்று ஒப்புக்கொண்டார்.
ஊர்த்தலைவன் கொங்கு இருபத்துநான்கு நாட்டிலேயும் உள்ள வேளாளப் பெருந்தகையோர்களுக்கு இவ்விஸியத்தை ஓலையில் எழுதி அதில் ஒருதேதி குறித்து எல்லாரையும் வரும்படி எழுதியிருந்தார். குறித்த நாளையில் எல்லாரும் வந்து சேர்ந்தார்கள் தலைவன் பெரிய கொட்டகைபோட்டு வந்த பிரமுகர்கள் அனைவரும் சாப்பிடுவதற்காக ஆயிரம் இலைகளுக்குமேல் போட்டுக்காய்கறி பதார்த்தங்களும், பலவகையான பலகாரங்களும் பறிமாறிவைத்துவிட்டு வாழிபுல்லாக்கவுண்டனிடம் ஊர்த்தலைவன் சென்று கவுண்டரே நீங்கள் அன்று கூறியபடி உங்கள் நாயைக் கூட்டிவந்து என்வீட்டுக் கொட்டகையில் பறிமாறி இருக்கும் இலைகளின் முன்னிலையில் விடுங்கள் பார்க்கலாம். வேளாளப்பெருமக்கள் அனைவரும் வந்திருக்கிறர்கள். அவர்கள் இதற்குமுடிவு 
சொல்லட்டும் என்றார்.
உடனே வாழிக்கவுண்டன் குளித்துவந்து கணபதியை நினைத்து விபூதியணிந்து சிறதுநேரம் கண்மூடி ஸோத்ரம் சொல்லியபின் தன்நாயைக் கயிற்றில்கட்டி பிடித்துக்கொண்டு ஊர்த்தலைவன் வீட்டுப்பந்தலுக்கு வந்தார். அங்கு நின்றுகொண்டிருக்கும் இருபத்திநான்கு நாட்டுப்பட்டக்காரர்களுக்கும் வணக்கம் செலுத்திவிட்டு பகவானை நினைத்துதுதிக்கலானார். ஆனைமுகத்தனே, ஐந்துகரனே, அகிலமெல்லாமிருப்பவனே , அடியேன்வம்சம் உன்அப்பன் அருளினால், ஆதி நாளையில் பூவுலகில் கங்கையிடம் உற்பத்தியாகி விருத்தியடைந்தது. உண்மையானால் என்நாய் இந்த வேட்டுவக்கவுண்டன் வீட்டுவிருந்து இலையில் அன்னம் புசியாதிருக்க வேண்டுமென்று கூறித்துதித்துவிட்டுத் தன்நாயை அந்த இலையின் முன் அவிழ்த்துவிட்டார்
நாயானது எல்லா இலைகளையும் முகர்ந்து பார்த்துவிட்டுக் கடைசி இலையின்மேல் காலைத்தூக்கி மூத்திரம் விட்டுவிட்டு வாலையாட்டிக்கொண்டு வந்து தன் எஜமானனிடம் நின்றது. உடனே கவுண்டன் அங்குவந்திருந்த வேளாளப் பெரியோர்களிடம், தனக்கும் ஊர்த்தலைவனுக்கும் நிகழ்ந்த விஸியத்தைக் கூறி இதற்குத் தீர்ப்புக் கூறுங்கள் என்றார். 
எல்லோரும் இனிமேல் நம்முடைய வம்சத்தவர்களுக்கு வேட்டுவநாவிதன் வேண்டாமென்று ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். அப்போது வாழிபுல்லாக்கவுண்டன் என்மகன் நால்வரில் இருவர் இத்தொழில் புரியட்டும் என்றார். அக்காலையில் ஒருவர் இவ்விருவருக்கும் பெண்யார் கொடுப்பார்கள் என்று கூற, அங்கு வந்திருந்த வெள்ளாஞ்செட்டிகளில் சிலர் நாங்கள் எங்கள் பெண்களைத் தருகிறோம் எங்கள்வமிசத்தவர்களுக்கும் சவரத்தொழில் புரியும் குடிமகனாய் இவர்கள் இருக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.
அவர்களும் சரி என்று கூறி நன்னாளில் நல்லதம்பிக்குச் செட்டிப்பெண் நல்லாத்தாளையும், அவன் தம்பி சின்னத்தம்பிக்கு சின்னாத்தாளையும் மணமுடித்து வைத்தார்கள். இச்செட்டிமார்களைத்தான் வெள்ளாஞ் செட்டியார்கள் என்கிறோம். இவர்களுக்குச் சகல சீர் சிறப்புகளும் மாங்கலியம் முதலியவைகளும் வேளாள வம்சத்தைப் போன்றவைகளாகும். 
கொங்கு இருபத்திநான்கு நாட்டில் உள்ள வேளாளப் பெருமக்களுக்கு இவர்கள் இருவருமே எவ்வாறு சவரத் தொழில் புரிய முடியுமென என்று சிலர் கூற அப்போது அங்கு வந்திருந்த அறுபது குலக்காணியார்களில் அனேகம்பேர் நாங்களும் இத்தொழில் செய்கின்றோம் என முன்வந்தார்கள். 
அக்காலையில் பிரிந்துவந்ததால்தான் இன்று இக்குடிமகன் குலத்திலும் நம்மைப் போலவே அறுபது கோத்திரங்கள் இருக்கின்றன.
நமது காணிகளில் சிலவற்றில் இவர்களுக்கும் பாத்தியமிருக்கிறது.  
இவர்களுக்குச் சகல சீர்சிறப்புகளும் வேளாளவம்சத்தைப் போன்றே. நம்வீட்டு அருமைப் பெரியவர்களே குடிமகனுடைய வீட்டுக்கல்யாணங்களில் அருகுமணம் எடுக்கிறார்கள். இன்று வேளாளவம்சத்தவர்களே வேட்டுவமக்கள் வீட்டில் நட்புபாராட்டி சாப்பிடுகிறார்கள். ஆனால் நம்குடிமகனோ அன்றுதொட்டு இன்றுவரையில் வேட்டுவர் வீடுகளில் சாப்பிடுவதோ, நீர்குடிப்பதோ இல்லை, நம்முன்னோர்கள் தாங்கள் வைத்த குடியென்று கருதி கல்யாணங்களில் பெண்வீட்டுச் சீர் இரண்டுக்கும் இரண்டுவள்ள அரிசியும் மாப்பிள்ளைவீட்டுச்சீர் மூன்றுக்கு மூன்றுவள்ள அரிசியும் கொடுக்கிறார்கள். அவரவர் தங்களுக்கு முடிந்த அளவு பிரியம்போல கொடுக்கிறார்கள்.



கொங்க நாவிதர்களின் நித்திய கடன்கள் சில:

 

கொங்கநாவிதர்களுக்கு மங்கலன் என்ற பெயரும் உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சீர்களும் கொங்க நாவிதர்களே செய்கின்றனர். 
கொங்க வெள்ளாளர்களின் கல்யாணங்களில் மங்கல வாழ்த்து பாடும் உரிமை அவர்களுக்கே உண்டு. 
நாவிதர் வாழ்த்து பாடினாத்தான் அது கல்யாணம் அவர்கள் மங்கல வாழ்த்து பாடலைனா அதை ஒருகல்யாணம்னே ஏத்துக்க மாட்டாங்க. 

http://mangalavazhthu.blogspot.in/

அதேபோல வீட்டில் யாராவது இறந்துவிட்டால் நாவிதர் வந்து உரிய சடங்குகளை செஞ்சால்தான் காரியங்களுக்கு எடுத்துட்டுப் போகமுடியும்.
இன்று நாவிதர்களை ஏதோ முடிவெட்டுபவர்களாக மட்டுமே பார்க்கிறோம். அது தவறு. நமது தாத்தா காலம் வரை ஆண்,பெண் என எல்லோருமே குடுமிதான் வெச்சிருப்பாங்க முடிவெட்டும்வழக்கம் கிடையாது. முகச்சவரம் மட்டுமே செய்வார்கள். பிற்பாடு வெள்ளக்காரன் காலத்திலேதான் இந்த கிராப் முடிவெட்டும் பழக்கம் வந்தது. 
நாவிதர்கள் நாட்டு மருத்துவர்களாக இருந்திருக்காங்க. அறுவை சிகிச்சை கூட பண்ணியிருக்காங்க. 
நாவித பெண்கள் மருத்துவச்சியாக இருந்து பிரசவம் பார்ப்பார்கள்.
நோய்தடுக்க எண்ணை தேய்த்தல் விடுதல் , உடல் உஷ்ணத்தை சமன்படுத்த புளிகரைத்து குடல் சுக்ரம் செய்தல்.

39 comments:

  1. Fentastic mapla congratulations 😤 for ur auspicious work.

    ReplyDelete
  2. கல்யாணம் உருதி ஆன பின்பு பெண் வீட்டு நாவிதர் வந்து உடல் முழுவதும் சவரம் செய்து ஆண்மை தொடர்பான விசையகளை கண்டு அறிந்து சொல்லுவர். மாப்ளை சரி இல்லை என்றால் திருமணம் நடைபெறாது

    ReplyDelete
    Replies
    1. இவ்வாறெல்லாம் இல்லை

      Delete
  3. நாவிதர்களையும் வேட்டுவக்கவுண்டர்களையும் கேவலப்படுத்தும் இந்ந பதிவிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன் ...வரலாற்று ஆவணங்களற்ற லட்சோப லட்சம் வாய்வழி கதைகள் இங்கு உண்டு. இவ்வளவு மெனக்கெடுகிறீர்களே ஒரு கொங்க நாவிதப் பையன் கவுண்டர் வீட்டுப் பெண்னை காதலித்தால் போனால் போகிறது என விட்டு விடுவார்களா

    ReplyDelete
    Replies
    1. கேவலப்படுத்தலயே, நாவிதர்களும் நம்மவர்களே என்றுதானே கூறியிருக்கார்...

      Delete
    2. கேவலப்படுத்தலயே, நாவிதர்களும் நம்மவர்களே என்றுதானே கூறியிருக்கார்...

      Delete
    3. பொய் அல்ல உண்மை தான்.என் மூதாதையரும் இதேயே கூறி உள்ளனர்.இது தமிழ்நாட்டில் உள்ள கொங்கு"நாவிதர்க்கு மட்டுமே பொருந்தும்.பிற நாவித இனங்களுக்கு பொருந்தாது..

      Delete
    4. கொங்கு நாவிதர்களுக்கு மட்டுமே பொருந்தும் பதிவு.... என் பாட்டி, தாத்தா, கூறியதும் இதுவே... உண்மை சாசனம்
      மேலும்
      கொங்கு நாவிதர் வேளாளர்களிடம் இருந்து பிரிந்தனர்
      அதற்கு முன்
      வேட்டுவ நாவிதர், பாண்டிய நாவிதர் என்ற இரு பிரிவு இருந்தது.

      Delete
  4. கொங்க நாவிதன் பற்றிய இந்தக் கதைய அவர்களது வரலாற்று பட்டையம் தான் கூறுகிறது. இது வாய்வழிக்கதை அல்ல தம்பி.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா அந்த பட்டயம் பற்றிய தகவல் ஏதேனும் உள்ளதா..

      Delete
  5. கேவலம் என்று நீங்கள் நினைக்க யாரும் பொறுபல்ல, இங்கே யாரும் யாரையும் கேவலப்படுத்தவில்லை. வேட்டுவ கவுண்டரும் அறியாமல் செய்த பிழைதான் அவரும் திட்டமிட்டே இக்காரியத்தைச் செய்யவில்லை. ஆனால் இருபுறமும் சரியான புரிதல்கள் இல்லாததால் இப்பிரச்சினை உருவாயிற்று! வெள்ளாஞ்செட்டி என்ற தனிப்பிரிவே இருக்கு

    ReplyDelete
    Replies
    1. வெள்ளாளருக்கு செட்டியார் பெண் கொடுத்ததால் வெள்ளாள செட்டி ஆவார்.அதுனால்தான் ஈரோடு, கோவை பகுதியில் மட்டுமே வெள்ளாஞ்செட்டி உள்ளனர்.

      Delete
  6. அக்கால வேட்டுவர் வெள்ளாளர் சமூக ஒற்றுமை
    http://www.karikkuruvi.com/2015/08/blog-post.html

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. அப்படியே நாவிதர் சமூகத்திற்கும் நந்தர்கள் மற்றும் மௌரியர்கள் பேரரசுக்கும் உள்ள வரலாற்றை முழுமையாக கூறினால் நன்றாக இருக்கும், ஒரு சமூகத்தை தாழ்த்தி அழகாக குறிப்பிட்ட நீங்கள் அச்சமூகத்தின் உயர் நிலை வரலாற்றை கூற மறுப்பதும் மறப்பதும் ஏன்???அப்ப அப்படி கூறிவிட்டால் உங்கள் நிலையைவிட உயர்ந்த நிலை என்று ஆகிவிடும் என்றா???

    ReplyDelete
    Replies
    1. நாவிதர் வரலாறு அல்ல கொங்கு வெள்ளாள நாவிதர் வரலாறு இது தான்.கொங்கு நாவிதனை நாவிதன் என்று அழைப்பதில்லை குடிமகன் அதாவது வேளிர் க்கு தலைமகன் ஆவர் என்று அழைப்பர். கொங்கு நாவிதரில் சிலர் நெறி தவறி பொருளீட்டும் நோக்கில் பலசாதியினருக்கு சவரம் முடிவெட்டுதல் போன்ற தொழில் செய்வதால் அவர்களும் தாழ்ந்து அவர்கள் சமூகத்தையும் தாழ்வு படுத்துகின்றனர்.

      Delete
  10. என்ன சொல்ல வறீங்க!?. நாவிதன் சூத்திரர் அவ்வளவு தானே.. சரி.

    ReplyDelete
    Replies
    1. கொங்கு நாவிதனே வெள்ளாள வம்சம் சூத்திரன் எப்படி ஆவான். உயர்ந்த குடி, கலாட்சாரம்,நாட்டு உரிமை,சீர்மரபு இவைகள் வெகு சிறப்பானவை ஆகும். கொங்கு நாவிதர் வேளாளர் இன சீர்களை மட்டுமே முன்னின்று நடத்துவர். மற்ற சாதி இன மக்களுக்கு சீர் செய்வதில்லை.

      Delete
  11. வெள்ளாஞ்செட்டி ஏன்னா கேவலபடுத்துறீங்க?

    ReplyDelete
  12. அருமை.ஆனால் இதை எப்படி நம்புவது

    ReplyDelete
  13. ஆதராம் இருக்கா

    ReplyDelete
    Replies
    1. கவுண்டர் மக்கள் தான் ஆதாரம்

      Delete
  14. எங்கள் ஊரில் அனைத்து கவுண்டர் மக்களும் என்னை தலமகண் என்று தான் கூறுவார்கள்

    ReplyDelete
  15. எங்கள் ஊரில் அனைத்து கவுண்டர் மக்களும் என்னை தல மகன் என்றுதான் கூறுவார்கள்.......நாவிதர் கொங்கு கவுண்டர் இடத்தில் எல்ல சாதியை விட மேலானவன்

    ReplyDelete
  16. கொங்கு மருத்துவர்கள்

    ReplyDelete
  17. அருமையாக சொன்னீர்கள்

    ReplyDelete
  18. சரி வாலிப்புல்லா கவுண்டனுக்கு சவரம் செய்தவன் எப்படி வேட்டுவ நாவிதன் ஆனான்? வேட்டுவ நாவிதன் ஏன் வெள்ளாளர்களுக்கு சவரம் செய்ய வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. அட பைத்தியமே வேட்டுவ நாவிதனே உன்மையான நாவிதர்

      Delete
  19. சரி வாலிப்புல்லா கவுண்டனுக்கு சவரம் செய்தவன் எப்படி வேட்டுவ நாவிதன் ஆனான்? வேட்டுவ நாவிதன் ஏன் வெள்ளாளர்களுக்கு சவரம் செய்ய வேண்டும்?

    ReplyDelete
  20. நீங்கள் கூறுவது உண்மை தான் இதனை என் முதாதீயர் கூறியுள்ளார்

    ReplyDelete
  21. நீங்கள் சொல்வது சரி.ஏன் கொங்கு வெள்ளாள கவுண்டர் கொங்கு நாவிதர் பெண் ணை விரும்பியும் திருமணம் செய்வதற்கு தயக்கம் கொள்வது ஏன்.பழகும் போது தெரியாத பிரிவு பழகிய பிறகு உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று எண்ணம் தோன்றுகிறது.

    ReplyDelete
  22. கொங்கு நாவிதர் வரலாறு இதில் குறிப்பிட்டதுபோல தான் உள்ளது செவிவழிக் கதைகள் தான் வரலாறுகளாக பின்னாளில் எழுதப்படுகிறது எழுதுபவர்கள் அவர்களுக்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்கிறார்கள் ஆனால் உண்மையில் செவிவழிக் கதைகள் உண்மைதான் அந்த காலத்தில் யார் என்று எழுதி வைத்திருந்தார் இதை சொல்வது நாங்கள் அல்ல கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தான்

    ReplyDelete
  23. வேளாண்மை என்றால் வெள்ளத் திருச்செங்கோடு தாலுகா அகரம் என்ற ஊரில் காணியாச்சு உள்ளது சென்றாய பெருமாள் கோவில் உள்ளதுதை ஆள்பவர் வெல்லம் என்றால் நீர் நீரைக் கொண்டு உணவு உற்பத்தி செய்பவர் வெள்ளாளர் வேளீர் கவுண்டர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வெள்ளாஞ்செட்டியார் என்றால் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து பொருளீட்டுவது செட்டியார்களின் பணி எண்ணைத் தொழில் பஞ்சு தொழில் நெல் விற்பனை பிரதான தொழிலாக இருக்கும். இதை நீங்கள் தமிழகம் முழுவதும் பார்க்கலாம் . சோழராஜா கொடுத்த பட்டயம் உள்ளது நான்காயிரம் வருடத்திற்கு மேற்பட்ட வரலாறுகளைக் கொண்ட ஒரு சமூகம் வெள்ளாஞ்செட்டியார் சமூகம் ஆகும் இங்கே வரலாறு என்று பிரித்துக் கூறப்படுகிறது இங்கே வரலாறு என்று ஒரு பதிவு திரித்து கூறப்பட்டுள்ளது

    ReplyDelete